மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குமரியில் அதிர்ச்சி... ஆபாச படம் எடுத்து கல்லூரி மாணவிக்கு மிரட்டல்.!! இளைஞர் கைது.!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் இளம் பெண்ணை காதலிப்பது போல் நடித்து அவரை ஆபாச படம் எடுத்து மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக 27 வயது வாலிபரை கைது செய்துள்ள காவல் துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லூரி மாணவியுடன் காதல்
குமரி மாவட்டம் புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த்(27). இவர் ராஜமங்கலம் பகுதியைச் சேர்ந்த 19 வயது மாணவியை காதலித்து வந்திருக்கிறார். மேலும் காதலர்கள் இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ளனர். மேலும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்ததாகவும் தெரிகிறது.
ஆபாச படம் எடுத்து மிரட்டல்
இந்நிலையில் மாணவியுடன் நெருக்கமாக இருந்ததை போட்டோ எடுத்த அரவிந்த் அந்தப் புகைப்படங்களை வைத்து மாணவியை மிரட்டி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து அச்சமடைந்த மாணவி இது தொடர்பாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மாணவியின் புகாரைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணையில் இறங்கினர்.
இதையும் படிங்க: அரசியல் பிரமுகர் பாலியல் தொல்லை.!! அட்ஜஸ்ட் செய்யச் சொன்ன கணவன்.!! பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.!!
கைது செய்யப்பட்ட அரவிந்த்
இந்நிலையில் அரவிந்தை கைது செய்த காவல்துறையினர் அவரது செல்போனை கைப்பற்றி சோதனை செய்ததில் மாணவியின் ஆபாச படங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரை சிறையில் அடைத்தனர். கல்லூரி மாணவியை காதலிப்பதாக கூறி ஆபாச படம் எடுத்து மிரட்டிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: மரணத்தில் முடிந்த லிவிங் டுகெதர் உறவு.!! ஆசிரியைக்கு நேர்ந்த துயர முடிவு.!!