மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெண் கால்நடை மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த 4 பேரையும் சுட்டுக் கொன்ற போலீசார்! பாராட்டும் பொதுமக்கள்!
ஐதராபாத் பெண் கால்நடை மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை செய்த வழக்கில் கைதான 4 பேரையும் போலீசார் சுட்டுக் கொன்றனர்.
பெண் கால்நடை மருத்துவர் ஒருவர் நான்கு பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அனைவர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வழக்கு சம்மந்தமாக முகமது பாஷா, நவீன், சிவா, சின்ன கேசவலு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நான்கு பேரும் குடி பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து இந்த வழக்கில் 4 பேருக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் கைதான 4 பேரையும் சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்து சென்ற போலீசார், சுட்டு கொன்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தண்டனை சரியானது என ஒட்டுமொத்த மக்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.