புகார் கொடுக்கவந்த பெண்ணை மசாஜ் செய்யவைத்த போலீஸ்.! வெளியான ஷாக் வீடியோ.!



police forced to massage the woman who came to complaint

பீகார் மாநிலம் சஹர்சாவை சேர்ந்தவர் சஷிபூஷன் சின்ஹா. இவர் அங்குள்ள காவல் நிலையத்தில் மூத்த காவலராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவரிடம் பெண் ஒருவர் தனது மகனுக்கு ஜாமீன் வேண்டும் என கோரி வந்துள்ளார். அப்போது காவல் நிலையத்தில் யாரும் இல்லை.

அப்போது சஷிபூஷன் சின்ஹா ​​தன்னை மசாஜ் செய்தால் உங்களது மகன் விரைவில் சிறையில் இருந்து வெளியே வருவார் என்று உறுதியளித்தார். இதனையடுத்து அந்தப் பெண் அவருக்கு தொடர்ந்து மசாஜ் செய்ததால், சஷிபூஷன் சின்ஹா ​​ஒரு வழக்கறிஞரை செல்போனில் தொடர்புகொண்டு அப்பெண்ணின் மகனை ஜாமீனில் விடுவிக்கும்படி கேட்டுக் கொண்டதாக்க கூறப்படுகிறது.

மூத்த அதிகாரியான சஷிபூஷன் சின்ஹா, சட்டை அணியாமல் வெறும் உடம்பில் ஒரு பெண்ணிடம் மசாஜ் செய்துகொண்டே போனில் பேசிய அந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த வீடியோ வைரலானதை அடுத்து, சஹர்சா காவல்துறை கண்காணிப்பாளர்  அந்த அதிகாரியை சஸ்பெண்ட் செய்தார்.