அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
தனது தட்டில் உள்ள சோற்றை சுற்றுலாப்பயணிக்கு கொடுத்த தமிழன்; நெகிழ்ந்துபோன அமெரிக்கர்.! வைரல் வீடியோ.!
தமிழனின் வீரமும், அன்பும், உபசரிப்பும் காலங்காலமாய் மாறாத தலைமுறை பண்புடன் தொடருகிறது.
அமெரிக்காவை சேர்ந்த யூடியூபர் கிரிஸ் லீவிஸ் (Chris Lewis). இவர் பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்குள்ள நகரங்களில் தான் சந்திக்கும் நபர்கள், சுற்றிப்பார்க்கும் இடங்கள் குறித்த விடியோவை வெளியிட்டு வருகிறார். மேலும், பல மொழிகள் கற்றுக்கொள்ளும் ஆர்வம் கொண்ட லீவிஸ், தான் செல்லும் மாநிலத்தின் மொழியை முன்னதாகவே குறைந்தளவு கற்றறிந்து பயணத்தை தொடருகிறார்.
அந்த வகையில், லீவிஸ் தற்போது சென்னைக்கு வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக சென்னை வந்த லீவிஸ், மெரினா கடற்கரையில் பயணம் செய்யும் காணொளிகளை பதிவு செய்து வருகிறார். சென்னை மெரினாவில் உள்ள சுந்தரி அக்கா உணவகத்திற்கு நேரில் சென்றவர், அங்கிருந்து இட்லி, பிரான் வாங்கி சாப்பிட்ட விடியோவை பதிவு செய்திருந்தார்.
இதையும் படிங்க: பெண்ணை மூர்க்கமாக முட்டிதூக்கிய எருமை; இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. பதறவைக்கும் வீடியோ உள்ளே.!
காவலரின் நெகிழ்ச்சி செயல்
அவர் உணவு சாப்பிட்டுக்கொண்டு இருந்தபோது, தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் பணியாற்றி வரும் நபர்களும் அங்கு இருந்தனர். லீவிஸ் தனது உணவை வீடியோ எடுத்தபடி சாப்பிட்டுக்கொண்டு இருக்க, அருகில் சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்களிடம் பேச்சுக்கொடுத்தார். அச்சமயம் அவர்கள் தங்களை காவல்துறையை சேர்ந்தவர்கள் என அறிமுகம் செய்து பேசிக்கொண்டு இருந்தனர்.
லீவிஸ் இட்லி வாங்கி சாப்பிட்ட நிலையில், சேலத்தை சேர்ந்த காவலர் கலையரசன் என்பவர், தான் இட்லி வாங்கி சாப்பிட்டுவிட்டு அரிசி சாதம் வாங்கி சாப்பிடுவதாக கூறினார். மேலும், தனது தட்டில் இருந்த சோற்றை ருசிபார்க்குமாறும் கூறினார். இதனால் மெய்சிலிரித்துப்போன லீவிஸ், சாதத்தை சாப்பிட்டு பார்த்து நன்றாக இருப்பதாக கூறினார். மேலும், கலையரசனின் செயலை நெகிழ்ந்து பாராட்டினார்.
மகிழ்ந்துபோன அமெரிக்கர் கிரிஸ்:
பேசியபடியே காவலரிடம் தனது வயதை கண்டறியுமாறு கேட்க, அவரும் வயதை கூறிய நிலையில், அதன் வாயிலாக மறுநாள் காவலர் கலையரசனின் பிறந்தநாள் என்பதை தெரிந்துகொண்ட லீவிஸ், தனது பாராட்டுகளையும் தெரிவித்தார். உபசரிப்பு விஷயத்தில் தமிழர்களின் பண்பு தலைசிறந்தது என்பது, கலையரசனின் நெகிழ்ச்சி செயலால் மீண்டும் உறுதியாகியுள்ளது.
இந்த விஷயம் குறித்து லீவிஸ் தனது முகநூல் பக்கத்தின் கமெண்ட்-டில், "சென்னை கடற்கரையில் சுவையான உணவு மற்றும் நட்பு மிகுந்த மக்கள்! அந்த போலீஸ் அதிகாரிகள் தங்கள் உணவைப் பகிர்ந்து கொண்டது அருமையாகவும் வேடிக்கையாகவும் இருந்தது!" என கூறியுள்ளார்.
இதுகுறித்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதன் காட்சிகள் உங்களுக்கும் இணைக்கப்பட்டுள்ளது. காவலரின் நெகிழ்ச்சி செயலை காண 3.30 நிமிடங்களுக்கு பின் காணொளியை பார்க்கவும்.
வீடியோ நன்றிகிரிஸ் லீவிஸ்
இதையும் படிங்க: முடிவுக்கு வரும் மாஞ்சோலை சகாப்தம்; கண்ணீருடன் வெளியேறும் தேயிலை தொழிலாளர்கள்.!