திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அழகுநிலையம் பெயரில் பயங்கரம்.. 17 வயது சிறுமி 40 பேரால் பலாத்காரம்.. பேரதிர்ச்சி தகவல்.!
18 வயது நிரம்பாத சிறுமியை அழகு நிலைய பெயரில் விபச்சாரத்தில் ஈடுபடுத்திய உரிமையாளர் உட்பட 40 பேரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அண்ணாநகர் பகுதியில் செயல்பட்டு வரும் அழகு நிலையத்தில், விபச்சார தொழில் நடைபெற்று வருவதாக உருளையன்பேட்டை காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மேற்கொண்ட அதிரடி சோதனையில், 18 வயது நிரம்பாத சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபத்தியதும் அம்பலமானது. இதனையடுத்து, அழகு நிலைய உரிமையாளர் மற்றும் வாடிக்கையாளர் என 40 பேரின் மீது போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கு தொடர்பான விசாரணைக்கு பின்னர், 12 க்கும் மேற்பட்ட நபர்களை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்த நிலையில், தலைமறைவாக உள்ளவர்களையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி கல்லையன்குப்பம் பகுதியை சார்ந்த பட்டதாரி இளைஞர் லோகேஷ் (வயது 23), விழுப்பும் திண்டிவனத்தை சார்ந்த தொழிலாளி மோகன்தாஸ் (வயது 32) ஆகியோரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 26 பேருக்கு வலைவீசப்பட்டுள்ளது.