மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அலைபாயுதே பாணியில் திருமணம்.. விடுதி அறையில் மனைவி கொடூரமாக அடித்தே கொலை.. காரணம் என்ன?.!
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள வம்பாகீரப்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் பிரதீப் (வயது 27). இவர் போட்டோகிராபராக பணியாற்றி வருகிறார். இதே பகுதியில் வசித்து வந்த இளம்பெண் அபூர்வா (வயது 22). இவர்கள் இருவரும் இடையே ஏற்பட்ட பழக்கம் காதலை மாறியது.
இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில், அலைபாயுதே திரைப்பட பாணியில் வீட்டிற்கு தெரியாமல் பதிவுத்திருமணம் செய்துகொண்டனர். அவரவர் வீட்டில் தனித்தனியே வசித்து வந்தாலும், தங்களின் காதலில் உறுதியாக இருந்துள்ளனர். அவ்வப்போது வெளியே சந்தித்து இருக்கின்றனர். விரைவில் முறைப்படி திருமணம் செய்யவும் பேசி இருக்கின்றனர்.
முகத்தில் காயம்
இந்நிலையில், காதல் ஜோடி சுப்பராயப்பிள்ளை வீதியில் இருக்கும் தனியார் விடுதியில், கடந்த 10 நாட்களுக்கு முன் அறையெடுத்து தங்கி இருக்கிறது. ஆகஸ்ட் 20ம் தேதி இரவில் அபூர்வாவை தோளில் சுமந்தவாறு விடுதி மாடியில் இருந்து பிரதீப் கீழே இறங்க, விடுதி பணியாளர் கார்த்திக் என்பவர், பிரதீப்பிடம் கேட்டு இருக்கிறார்.
இதையும் படிங்க: புதுத்துணி கேட்டது குத்தமா?.. மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற கணவர்.!
அச்சமயம் அபூர்வா மயங்கி விழுந்துவிட்டதாக கூறியதால், உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மருத்துவமனைக்கு சென்று கார்த்திக் பார்த்தபோது, அபூர்வவின் முகத்தில் காயம் இருக்க, பிரதீப்பிடம் அவர் விடுதிக்கு வந்து பொருட்களை எடுத்தபோது விசாரித்து இருக்கிறார்.
நடத்தை சந்தேகத்தால் கொடூரம்:
அப்போது, தனது காதலியான அபூர்வா வேறொரு நபருடன் தொடர்பு வைத்திருத்ததன் காரணமாக தாக்கியதாக கூறியதால், கார்த்திக் விடுதி மேலாளரிடம் தகவல் தெரிவித்து, பின் பெரியகடை காவல் நிலையத்தில் புகார் அளித்து இருக்கிறார். புகாரை ஏற்ற காவல்துறையினர் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
போலீஸ் முதற்கட்ட விசாரணை
இதற்கிடையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அபூர்வா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட, வம்பாகீரப்பாளையம் கிராமத்தில் இறுதிச்சடங்கும் நடைபெற்றது. காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் பிரதீப் காதலியை சரமாரியாக தாக்கி, அவரின் முகத்தை விடுதி சுவரில் தலைமுறையை பிடித்து அடித்து காயப்படுத்தியதும் உறுதியானது.
விரைவில் குற்றவாளியை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. விசாரணைக்கு பின்னரே உண்மை அம்பலமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: புதுத்துணி கேட்டது குத்தமா?.. மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற கணவர்.!