திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
விபத்தை ஏற்படுத்தி நிற்காமல் சென்ற கார்.. மடக்கிப்பிடித்த பெண் அதிகாரி மீது தாக்குதல்.!
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கிருமாம்பாக்கம் போக்குவரத்து காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் காவல் அதிகாரி ஜீவிதா. இவர் கடந்த பிப். 19 ஆம் தேதி கடலூர் சாலையில் உள்ள தவளக்குப்பம் சிக்னல் அருகே பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்துள்ளார்.
அப்போது, கடலூரில் இருந்து புதுச்சேரி நோக்கி பயணம் செய்த கார், விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் தொடர்ந்து சென்றுள்ளது. இதனைக்கண்ட ஜீவிதா, பொதுமக்கள் உதவியுடன் காரை விரட்டிச்சென்று பிடித்துள்ளார்.
காரில் இருந்து இறங்கிய நபர்கள் ஜீவிதாவிடம் வாக்குவாதம் செய்து, அவரை தாக்கி இருக்கின்றனர். இதனால் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். இந்த வசியம் தொடர்பாக காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, புகாரை ஏற்றுக்கொண்ட தவளக்குப்பம் காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து தமிழ்நாட்டினை சேர்ந்த 2 இளைஞர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.