விசாரணைக்கு வரும் கைதிக்கு கோர்ட் வாசலில் கஞ்சா சப்ளை.. 4 சில்வண்டுகள் சம்பவம்.!



Pondicherry Court 4 Man Gang Team Arrested try to Supply Ganja

புதுச்சேரி நீதிமன்றத்தில் விசாரணைக்காக வரும் கைதிகளுக்கு, கஞ்சா உட்பட போதைப்பொருட்கள் ரகசியமாக வழங்கபடுகிறது என காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை தொடர்ந்து, சிறப்பு அதிரடிப்படை காவல் துறையினர் நீதிமன்ற வளாகத்தில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். 

இதன்போது, நீதிமன்ற வளாகத்திற்குள் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்ற 4 பேரை அதிகாரிகள் பிடிக்க முயற்சித்த போது, அவர்கள் காவல் துறையினரை தகாத வார்த்தையால் பேசி தப்பிச்செல்ல முயற்சித்தனர். அதிகாரிகள் அவர்களை விரட்டி, சுற்றிவளைத்து மடக்கி பிடித்தனர். 

Pondicherry

அவர்களிடம் நடத்திய விசாரணையில், அரியாங்குப்பம் சுப்பையா நகர் பகுதியை சார்ந்த ராம்குமார் (வயது 24), பூரணாங்குப்பத்தை சார்ந்த திலீப் குமார் (வயது 23), வேல்ராம்பட்டை சார்ந்த மகேஸ்வரன் (வயது 22), சத்யராஜ் (வயது 22) என்பது தெரியவந்தது. 

இவர்கள் அனைவரும் சேர்ந்து விசாரணைக்கு வரும் கைதிகளுக்கு கஞ்சா கொடுக்க முயற்சித்தும் அம்பலமானது. 4 பேரையும் கைது செய்த காவல் துறையினர், கைதியோடு கைதியாக சிறையில் அடைத்தனர்.