மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதலி பேசாத விரக்தியில் காதலன் விபரீத முடிவு; கோபம் குறைந்த காதலிக்கு காத்திருந்த அதிர்ச்சி செய்தி.!
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பூமியான் பேட்டை, பாவனா நகர் பகுதியில் வசித்து வருபவர் சரவணன். இவரது மனைவி தையல்நாயகி. தம்பதிகளில் சரவணன் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார்.
இவர்களின் மகன் ஆனந்த் (வயது 22). நெல்லித்தோப்பு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்வி நிறுவனத்தில் டிப்ளமோ இரண்டாம் ஆண்டு பயந்து வருகிறார்.
இதே கல்வி நிறுவனத்தில் படித்தவரும் மாணவியை கடந்த ஓராண்டாக இவர் காதலித்து வந்ததாகவும், இருவரும் கல்லூரி முடிந்து வீடு திரும்பிய பின்னர் செல்போனில் பேசியும் காதலை வளர்த்து வந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
கடந்த இரண்டு வாரமாகவே இவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு வந்த நிலையில், மன உளைச்சலில் ஆனந்த் இருந்து வந்துள்ளார். நேற்று மதியம் அவர் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இரண்டு வாரமாக பேசாமல் இருந்த காதலியோ திடீரென காதலனின் மீது பாசம் கொண்டு ஆனந்தை தொடர்பு கொண்ட சமயத்தில், நீண்ட நேரம் ஆகியும் போன் எடுக்கப்படவில்லை.
இதனால் அவரது தாயாருக்கு போனில் தொடர்பு கொண்டு ஆனந்த் எங்கே இருக்கிறார்? என்று கேட்க, அவர் வேலைக்கு சென்று இருந்த நிலையில் வீட்டிற்கு சென்று பார்த்தபோது மகன் சடலமாக தூக்கில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக ரெட்டியார்பாளையம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.