புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து எப்போது?.. மனம்திறந்த துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன்.!



Pondicherry Lt Governor Speech about Pondicherry State Power

 

புதுச்சேரி மாநில ஆளுநர் மாலையில் கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாடப்பட்டது. அப்போது, விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், முதல்வர் ரங்கசாமி கேக் வெட்டி கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறப்பித்தனர். 

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன், "புதுச்சேரி மாநிலம் வளர்ச்சிபட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. நல்ல நிர்வாகம், நல்லாட்சி நடப்பதே அதற்கு காரணம். மாநிலத்தில் வளர்ச்சிப்பணிகளே நடக்கவிலை என்பது பொய்.

சுகாதார மேம்பாடு திட்டங்கள் & முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்வருடன் ஆலோசனை நடந்துள்ளது. சி.பி.எஸ்.இ பாடத்திட்டதால் தமிழ் நசுக்கப்படும் என்பது ஆதாரமில்லாத குற்றசாட்டு ஆகும். சி.பி.எஸ்.இ படிப்பிலும் தமிழ்கல்வி உள்ளது.

Pondicherry

மதுரை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசை கேள்வி எழுப்பியுள்ளது. மாநில எம்.பிக்கள் பாராளுமன்றத்தில் எவ்வுளவு முறைகள் அதுகுறித்து விவாதித்து இருக்கிறார்கள்?.  புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இருப்பினும் மக்களின் நலன் சார்ந்து செயல்படுகிறது. மாநில அந்தஸ்து தொடர்பான விவகாரம் பல ஆண்டுகளாக தொடரும் பிரச்சனை. 

அதனை உடனடியாக சரி செய்வது எளிதானது அல்ல. அதற்கு பாரளுமன்றத்தில் விவாதம் நடக்க வேண்டும். அனுமதி பெறவேண்டும். மாநில அந்தஸ்து விவகாரம் அரசியலுக்காக பேசப்படலாம். அவற்றுக்கான பணிகள் நீண்டது" என்று பேசினார்.