மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நீண்ட வரிசையில் காத்திருந்து மணக்குளத்து லட்சுமிக்கு அஞ்சலி செலுத்தும் மக்கள்.. இறுதிநிமிட வீடியோ வெளியானது.!
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மணக்குள விநாயகர் கோவிலில் லட்சுமி என்ற யானை வளர்க்கப்பட்டு வந்தது. இந்த யானை கோவிலுக்கு வருவோரிடம் அன்பாக பழகுதல், சிறுவர்களுடன் விளையாடுதல் என ஆனந்தமாக இருந்து வந்தது.
இதனால் யானை லட்சுமிக்கு பலரும் அன்பின் அடிமையாக இருந்து வந்தனர். யானைப்பாகனும், கோவில் நிர்வாகமும் லட்சுமியை நன்கு கவனித்து வந்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை லட்சுமி திடீரென மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது.
இந்த தகவல் அறிந்த பலரும் சோகத்தில் மூழ்கிய நிலையில், லட்சுமிக்கு அஞ்சலி செலுத்த விரைந்தனர், பலரும் நீண்ட வரிசையில் காத்திருந்து அஞ்சலியை செலுத்துகின்றனர்.
இன்று காலையே அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நேரில் வந்து லட்சுமிக்கு அஞ்சலி செலுத்தி சென்றிருந்தார். இந்நிலையில், லட்சுமி திடீரென மயங்கி சாலையில் விழுந்து துடிதுடிக்க மரணமடைந்த சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளன.