மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருமண வரவேற்பில் மதுபான விநியோகம்.. தாம்பூல பையை பார்த்தோருக்கு அதிர்ச்சி.. குஷியில் குடிமகன்கள்.!
இன்றளவில் மதுபானம், புகை, கஞ்சா போன்ற உடலுக்கு கேடான விஷயங்களை எடுத்துக்கொள்வது இயல்பான ஒன்று என்பதை போல மக்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. சுப நிகழ்ச்சிகளாக இருந்தாலும், துக்க நிகழ்ச்சிகளாக இருந்தாலும் அங்கு மதுபானம் என்பது முக்கியமாக கருதப்படுகிறது.
இந்த நிலையில், திருமணத்திற்கு பொதுவாக குடும்பத்தின் வசதிக்கேற்ப தாம்பூல பையில் வெற்றிலை பாக்கு, பழவகைகள் முதல் வசதிக்கேற்ப பொருட்கள் வழங்கப்படும். இந்த நிலையில், புதுச்சேரியில் நடந்த திருமணத்தில் மணமகள் வீட்டார் திருமண வரவேற்புக்காக மதுபானத்தை கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.
சென்னையை சேர்ந்த மணமகனுக்கும் - புதுச்சேரியை சேர்ந்த மணப்பெண்ணுக்கு நடந்த திருமணத்தில், மணப்பெண் சார்பில் வழங்கப்பட்ட தாம்பூலத்தில் மதுபானம் இருந்துள்ளது. இந்த செயலால் மதுவிரும்பிகள் மகிழ்ச்சி அடைந்தாலும், பெண்கள் முகம் சுளிக்கும் தருணம் ஏற்பட்டது.