திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
செலவுக்கு காசில்லையென அம்மனின் தாலி சங்கிலியை களவாடிய பெயிண்டர் கைது.!
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கிருமாம்பாக்கம், கன்னியகோவில் நகரில் உள்ளது பச்சைவாழியம்மன் கோவில். இந்த கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாக இருந்து வந்த நிலையில், கடந்த மாதம் 30 ஆம் தேதி பூசாரி, பூஜையை முடித்துவிட்டு சாப்பிட சென்றுள்ளார்.
அப்போது, சாமி தரிசனம் செய்வது போல வந்தவர், அம்மன் கழுத்தில் இருந்த தாலி சங்கிலியை திருடி தப்பி சென்றுள்ளார். இந்த நிகழ்வுகள் கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ளது.
இந்த விஷயம் தொடர்பாக கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது. விசாரணையில், கடலூர் மாவட்டத்தில் பண்ரூட்டி, திருவதி பகுதியை சேர்ந்த பாக்கியராஜ் (வயது 38) நகையை திருடியதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
பாக்கியராஜை கைது செய்த அதிகாரிகள், அவரிடம் இருந்து அம்மனின் தாலி சங்கிலியை மீட்டனர். பெயிண்டராக பணியாற்றி வரும் பாக்கிய ராஜ், அவ்வப்போது பணம் தேவைப்படும் நேரங்களில் திருடியும் வந்துள்ளார். இவரின் மீது ஏற்கனவே வானூர், கோட்டக்குப்பம், மங்களம் போன்ற பல காவல் நிலையத்தில் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருந்துள்ளன.