மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதல் திருமணம் செய்த 8 மாதத்தில் மாமியார்-மருமகள் தூக்கிட்டு தற்கொலை.. கணவன் உயிர் ஊசல்.. கண்ணீர் சோகம்.!
மாமியார் - மருமகள் சண்டையில் மருமகள் தற்கொலை செய்துகொண்ட நிலையில், கணவன் மனைவியின் பிரிவால் தற்கொலை முயற்சியெடுக்க, இளைஞனின் தாய் தற்கொலை என குடும்பத்தில் அடுத்தடுத்து நடந்த துயரம் நெஞ்சை உலுக்க வைத்துள்ளது. காதலித்த 8 வது மாதத்தில் திருமணம் முடிந்த சில மாதங்களில் மரணம் என சோகத்தை விவரிக்கிறது இந்த செய்திதொகுப்பு.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள திருபுவனை, சன்னியாசிக்குப்பம் முத்து மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் ஆனந்த் (வயது 29). இவர் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சீர்காழியை சேர்ந்தவர் சந்தியா (வயது 23), செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.
திருமணத்திற்கு பின்னர் இருவரும் ஒன்றாக வசித்து வந்த நிலையில், இவர்களுடன் ஆனந்தின் தயார் அன்னக்கிளியும் வசித்து வந்துள்ளார். இதனால் மாமியார் - மருமகள் இடையே அவ்வப்போது தகராறு ஏற்படவே, இருவரையும் ஆனந்த் சமாதானம் செய்து வைத்துள்ளார். இந்த நிலையில், மனமுடைந்து காணப்பட்ட சந்தியா இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
காலையில் மனைவி பிணமாக கண்ணெதிரே தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்த ஆனந்த், தானும் அதே அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அன்னக்கிளி கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் வந்து ஆனந்தை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில், மருமகள் இறந்த துக்கம், மகனின் தற்கொலை முயற்சியால் மனமுடைந்துபோன அன்னக்கிளி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கண்டார். மருத்துவமனைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த உறவினர்கள், அன்னக்கிளி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர், இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் தற்கொலை செய்த சத்யா, அன்னக்கிளி ஆகியோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.