முன்னாள் பள்ளி மாணவியுடன் 42 வயது வாத்தி கள்ளக்காதல், ரகசிய திருமணம்.. காதல் திருமணம் செய்த மனைவி கண்ணீர்.!



Pondicherry Thirubhuvanai Teacher Affair with Ex Girl Student Love Married Woman Feeling Sad

காதலித்து கரம்பிடித்தளவை கைவிட்ட அரசுப்பள்ளி ஒப்பந்த ஆசிரியர், பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவியுடன் கள்ளக்காதல் வயப்பட்டு, ரகசிய திருமணம் செய்து மனைவிக்கு வரதட்சணை கொடுமை செய்த சம்பவம் நடந்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள திருபுவனை, கலிதீர்த்தாள்குப்பத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 42). இவர் அப்பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில் ஒப்பந்த ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி மகேஸ்வரி (வயது 38). இவர்கள் இருவரும் கடந்த 2006 ஆம் வருடத்தில் காதல் திருமணம் செய்த தம்பதிகள் ஆவார்கள். 

திருமணத்தின் போது செந்தில் குமாருக்கு 25 சவரன் நகை வரதட்சணையாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், செந்தில் குமாரின் குடும்பத்தினர் 50 சவரன் நகைகள் மற்றும் கார் கேட்டு வரதட்சணை கொடுமை செய்து வந்துள்ளனர். மேலும், வரதட்சணை கொடுக்காத பட்சத்தில், செந்திலுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்து வைப்போம் என்றும் மிரட்டி இருக்கின்றனர்.

கடந்த 2018 ஆம் வருடம் மகேஸ்வரிக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், குழந்தையை பராமரிக்க செந்தில்குமார் தன்னிடம் பயின்ற முன்னாள் மாணவியை வேலைக்கு அமர்த்தியிருக்கிறார். அப்போது, செந்தில் குமாருக்கும் - வீட்டில் பணிப்பெண்ணாக சேர்ந்த அவரின் முன்னாள் மாணவிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. 

Pondicherry

இந்த விஷயத்தை தெரிந்துகொண்ட மகேஸ்வரி பெண்ணை வேலையைவிட்டு நிறுத்திவிடவே, கடந்த சில வாரத்திற்கு முன்னதாக வீட்டில் இருந்து சென்ற செந்தில்குமார் வீட்டிற்கு வரவில்லை. வேலைக்கார பெண்ணும் மாயமான நிலையில், இருவரும் ரகசிய திருமணம் செய்துகொண்டது அம்பலமானது.

இந்த தகவலை அறிந்த மகேஸ்வரி செந்தில் குமாரின் பெற்றோரிடம் விசாரித்த போது கொலை மிரட்டலும் விடுபட்டுள்ளது. மகேஸ்வரி தற்போது வில்லியனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.