மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பாஜக பிரமுகர் வெடிகுண்டு வீசி வெட்டி கொலை; துள்ளத்துடிக்க நடுரோட்டில் நடந்த பயங்கரம்.!
பேக்கரி கடை அருகே நின்றுகொண்டிருந்த பாஜக பிரமுகரை 6 பேர் கும்பல் வெட்டி கொலை செய்தது.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள வில்லியனூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில். இவர் பாஜக பிரமுகராவார். இந்நிலையில், சம்பவத்தன்று அவர் பேக்கரி கடையில் அருகே நின்று கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில் 6 பேர் கும்பல் திடீரென அங்கு வந்து வெடிகுண்டு வீசி, கத்தியால் வெட்டி அவரை கொலை செய்த தப்பி சென்றது.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 6 பேர் கும்பலுக்கு அதிகாரிகள் வலைவீசியுள்ளனர்.