மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உடல்நலத்தை கூட கவனிக்காமல் படிப்பில் நாட்டம்.. 15 வயது சிறுமி மூச்சுத்திணறி பலி.!
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள வில்லியனூர் சுல்தான்பேட்டை, முகமதியர் நகரில் வசித்து வருபவர் கவுஸ் பாஷா. இவர் சோபா கடையில் பணியாற்றி வருகிறார். இவரின் மகள் சோபியா பேகம் (வயது 15). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.
கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சோபியா பேகம், படிப்பில் தீவிரமாக இருந்து வந்ததால் உடல் நலத்தை கூட கவனிக்காமல் படித்து வந்துள்ளார். மேலும், சரிவர மருந்து - மாத்திரைகளையும் எடுத்துக்கொள்ளவில்லை.
இந்நிலையில், வீட்டில் இருந்த போது சோபியா பேகத்திற்கு மூச்சுத்திணறல் ஏற்படவே, அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளை மீட்டு அருகே இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவர்கள், கதிர்காமம் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து, ஆட்டோவில் மகளை பெற்றோர் கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லவே, அங்கு சோபியா பேகத்தை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என தெரிவித்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக கவுஸ் பாஷா அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.