மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாசலில் தூங்கிய கணவன்.. வீட்டிற்குள் கதறிய மனைவி., திடுக்கிட்டு விழித்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி.!
கோடை காலம் என்பதால் கணவர் வெளியே உறங்க, கதவை தாழிடாமல் உறங்கிய மனைவிக்கு நடந்த சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்திதொகுப்பு.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள வில்லியனூர், அகரம் மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் பரமேஸ்வரி (வயது 29). இவரின் கணவர் சக்திகுமார். இவர் தனியார் நிறுவனத்தில் ஆபரேட்டராக பணியாற்றுகிறார். பரமேஸ்வரி கூலிவேலைக்கு சென்று வருகிறார்.
தம்பதிகளுக்கு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில், நேற்று இரவில் வழக்கம்போல குடும்பத்தினர் சாப்பிட்டு உறங்க சென்றுள்ளனர். கோடை வெயிலின் தாக்கம் காரணமாக சக்திகுமார் வீட்டின் வெளியே உறங்கியுள்ளார்.
பரமேஸ்வரி வீட்டின் கதவை உட்புறமாக தாழிடாமல், குழந்தைகளுடன் உறங்கியிருக்கிறார். நள்ளிரவு நேரத்தில் பரமேஸ்வரியின் கையை யாரோ பலமாக அழுத்துவது போல உணர்வு ஏற்பட, அவர் எழுந்து பார்க்கையில் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தன் என்பவன் அருகில் இருப்பது தெரியவந்தது.
இதனால் பதறிப்போன அவர் கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் மற்றும் சக்தி ஆகியோர் விரைந்துள்ளனர். சிக்கினால் நம்மை தாக்கிவிடுவார்கள் என உணர்ந்த கோவிந்தன், அங்கிருந்து தப்பி சென்றுள்ளான். மறுநாள் காலையில் பரமேஸ்வரி சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கோவிந்தனை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.