திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நண்பனுடன் மனைவி உல்லாசமாக இருப்பதை நேரில் பார்த்த கணவன் பரபரப்பு செயல்.. வீட்டுக்குள் நடந்த களேபரம்., பறிபோன உயிர்..!
தனது வீட்டிற்கு வந்து சென்ற நண்பரோடு மனைவி உல்லாசமாக இருந்ததை நேரில் கண்ட கணவன் நண்பனை போட்டுத்தள்ளிய பயங்கரம் நடந்துள்ளது..
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஏனாம் குருசம்பெட்டா பகுதியை சேர்ந்தவர் கொல்லட்டி ராம்பாபு. இவரின் நண்பர் சங்காடி. இவர்கள் இருவரும் சில்லறைக்கு மீன் வாங்கி விற்பனை செய்பவர்கள். இதனால் ராம்பாபுவின் வீட்டிற்கு அவ்வப்போது சங்காடி வந்து சென்று இருக்கிறார்.
அப்போது, ராம்பாபுவின் மனைவி அர்த்தானியுடன் அங்காடிக்கு நெருக்கம் ஏற்படவே, இருவரும் கள்ளக்காதல் வயப்பட்டுள்ளனர். கள்ளக்காதல் ஜோடி பலமுறை தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளது. கடந்த 12ம் தேதியும் கள்ளக்காதல் ஜோடி தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளது.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ராம்பாபு, ஆத்திரமடைந்து கையில் இருந்த கத்தியால் சங்காடியை கழுத்தில் குத்தி கொலை செய்துள்ளார். சம்பவ இடத்திலேயே சங்காடி உயிரிழந்துவிட, தகவல் அறிந்து சென்ற ஏனாம் காவல் துறையினர் சங்காடியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ராம்பாபுவை ஹைதராபாத் புறவழிச்சாலையில் வைத்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.