திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இப்படியும் ஒரு காதல்..! மதுபோதை காதலனின் தற்கொலையால் சோகம்; மனமுடைந்து இளம்பெண்ணும் விபரீத முடிவு.!
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஏனாம் பகுதியைச் சார்ந்த இளம்பெண் மௌனிகா (வயது 22). இவர் அப்பகுதியை சார்ந்த சின்னா என்ற இளைஞரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில், போதைக்கு அடிமையாக இருந்த சின்னா தனது சகோதரர் மதுபானம் அருந்த பணம் கொடுக்காத காரணத்தால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவரின் மறைவை அறிந்த காதலி மௌனிகாவும் சோகத்தில் இருந்து வந்த நிலையில், மனஉளைச்சலில் நேற்று தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.