தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
"பாகிஸ்தான் ஜிந்தாபாத்" கோஷமிட்ட பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பினர்; நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்...!
புனேயில் என்.ஐ.ஏ. நடவடிக்கையை கண்டித்து நடந்த போராட்டத்தில் "பாகிஸ்தான் ஜிந்தாபாத்" என கோஷம் போட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜனதா கட்சி வலியுறுத்தியுள்ளது.
மும்பை, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 15 மாநிலங்களில் கடந்த வியாழக்கிழமை பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்கள் மற்றும் அதன் நிர்வாகிகளின் வீடுகள் போன்ற இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு அந்த அமைப்பை சேர்ந்த 106 பேர் நாடு முழுவதும் கைது செய்யப்பட்டனர்.
மகாராஷ்டிராவில் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் என்.ஐ.ஏ.வின் நடவடிக்கையை கண்டித்து, நேற்று புனே கலெக்டர் அலுவலகம் முன்பு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 40 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில் காவல்துறையினர் போராட்டக்காரர்களை கைது செய்து வேனில் ஏற்றி உட்கார வைத்து இருந்த போது அவர்கள் "பாகிஸ்தான் ஜிந்தாபாத்" (பாகிஸ்தான் வாழ்க) எனமுழக்கமிட்டனர். மேலும் கோஷமிட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்தநிலையில் போராட்டத்தின் போது "பாகிஸ்தான் ஜிந்தாபாத்" என முழக்கமிட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாக புனே காவல்துறையினர் கூறியுள்ளனர். இதுகுறித்து புனே காவல் துணை கமிஷனர் சாகர்பாட்டீல் கூறுகையில், சட்டவிரோதமாக கூடியது தொடர்பாக பாப்புலர்பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் மீது வழக்குப்பதிவு செய்து இருக்கிறோம். கோஷம் எழுப்பப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.
இதேபோல் புனே பந்த்கார்ட்ன் பகுதியில் உரிய அனுமதி பெறாமல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக 60-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக பந்த்கார்டன் காவல் துறை அதிகாரி ஒருவர் கூறினார். இந்த நிலையில் போராட்டத்தின் போது "பாகிஸ்தான் ஜிந்தாபாத்" கோஷம் எழுப்பப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தி இருக்கிறது.
இதுகுறித்து பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ.நிதேஷ் ரானே பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியவர்கள் தப்பிக்க முடியாது என்றும், மேலும் அந்த அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும். என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மற்றொரு எம்.எல்.ஏ. ராம் சட்புதே, "பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், காவல்துறையினர் அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் " என வலியுறுத்தி இருக்கிறார்.