மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மசூதிக்குள் பிரேதபரிசோதனை! பேருந்து நிலையத்தில் தொழுகை! இஸ்லாமியர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்!
கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்து உள்ளதால் கேரளாவில் பல இடங்களில் நிலச்சரிவு மற்றும் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது.இந்த வெள்ள பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 104 ஆக உயர்ந்து உள்ளது.
கடந்த வியாழக்கிழமை மலப்புரம் மாவட்டத்தில் உள்ள காவலப்பராவில் பேரழிவுகரமான நிலச்சரிவு ஏற்பட்டது. சமீப காலத்தில் ஏற்பட்ட மிக மோசமான நிலச்சரிவு இதுதான் என்று கூறப்படுகிறது. இதில் 50க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அவர்களின் உடலை மீட்கும் பணிநடந்து வந்தது.
இந்நிலையில் மீட்கப்படுபவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக மலப்புரம் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படுள்ளது. இந்த நேரத்தில் மீட்பு பணிக்கு உதவி செய்துக்கொண்டிருந்த முஸ்லிம் மக்கள், இறந்தவர்களின் உடல்களை அவர்களது மசூதியில் வைத்து பிரேத பரிசோதனை செய்ய முடிவு எடுத்து, மசூதிகளின் கதவுகளைத் திறந்து விட்டனர்.
மசூதியில் உடற்கூராய்வில் மருத்துவர்கள் ஈடுபட்டதால் ,நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் இஸ்ஸாமியர்கள் வழக்கம் போல நடத்தப்படும் தொழுகையை அங்கு உள்ள பேருந்து நிலையத்தில் ஈடுபட்டனர். அந்த தொழுகையில் ஏராளமான பெண்களும் கலந்து கொண்டனர்.