திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மோடி தான் மிகச்சிறந்த நடிகர்.! பிரகாஷ் ராஜ் அதிரடி.!
சினிமாவை கடந்து நடிகர் பிரகாஷ்ராஜ் கடந்த சில வருடங்களாக பாஜக எதிர்ப்பு தொடர்பான பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதிலும் பிரதமர் நரேந்திர மோடி தொடர்பாக தொடர்ந்து பிரகாஷ்ராஜ் விமர்சனம் செய்து வருகிறார். மேலும் இது குறித்து அவர் மீதும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
அதன்படி ஒரு தனியார் செய்தி நிறுவனத்திற்கு அண்மையில் அவர் வழங்கியுள்ள நேர்காணலில் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சனம் செய்து பேசியிருக்கிறார். இது அரசியல் வட்டாரத்திலும், தமிழ் சினிமா துறையிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிகழ்ச்சியில் கமலஹாசனும், நீங்களும் மிகச்சிறந்த நடிகர்களாக இருக்கிறீர்கள். ஆனால் அரசியலைப் பொறுத்தவரையில் தோல்வியடைந்து விட்டீர்கள். அப்படியெனில் உங்களை விட சிறந்த நடிகர்கள் அரசியலில் இருக்கிறார்களா? என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
பத்திரிக்கையாளரின் கேள்விக்கு பதிலளித்து பேசிய பிரகாஷ்ராஜ், பிரதமர் நரேந்திர மோடி தான் சிறந்த நடிகர், மிகச்சிறந்த பேச்சாளர், மிகச் சிறந்த பெர்பார்மர், காஸ்டியூம் டிபார்ட்மெண்ட், ஹேர் ஸ்டைல் டிபார்ட்மென்ட் என்று அனைத்தையும் அவர் வைத்திருக்கிறார் என்று பேசியுள்ளார்.
அவருடைய இந்த பேச்சு தற்சமயம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் பலர் அந்த வீடியோவை பகிர்ந்து, கமலஹாசன் நல்ல அரசியல் தலைவர் இல்லையா? என்றும் கேள்வியெழுப்பி வருகிறார்கள்.