மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பணிக்கு வரும் வழியில் சோகம்; காரை ஓட்டியபோதே மாரடைப்பால் பிரிந்த உயிர்..! மறையும்போதும் மனிதநேயம்.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ப்ரயக்ராஜ் மாவட்டம், ஹாண்டியா அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் வேலை பார்த்து வரும் மருந்து பிரதிநிதி பிரமோத் யாதவ் (50). இவர் இன்று காலை மருத்துவமனைக்கு தனது காரில் சென்றுகொண்டு இருந்தார்.
மாரடைப்பால் பலி
இந்நிலையில், அவர் வீட்டில் இருந்து புறப்பட்ட சில நிமிடத்திலேயே உடல்நிலை மாற்றத்தை எதிர்கொண்டவர், தனக்கு எதோ நேரப்போகிறது என்பதை உணர்ந்து காரை சாலையோரம் நிறுத்தி இருக்கிறார். பின் அப்படியே மாரடைப்பால் இறந்துள்ளார்.
இதையும் படிங்க: மசூதிக்குள்ளேயே தொழுகையின்போது மாரடைப்பால் பிரிந்த உயிர்; முதியவருக்கு நேர்ந்த சோகம்..!
காலையிலேயே பிரிந்த உயிர்
கார் ஓரமாக நின்று இருந்ததால் மக்கள் அதனை கண்டுகொள்ளாத நிலையில், நண்பகல் 12 மணியளவில் கார் ஒரே இடத்தில் நிற்பதை கண்டு சந்தேகமடைந்த பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் ப்ரமோத்தின் உடலை சோதனை செய்தபோது மரணம் உறுதியாகவே, உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பின் இதுதொடர்பாக அவரின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: உடற்பயிற்சி செய்தவாறு உயிரிழந்த இளைஞர்; நொடியில் மாரடைப்பால் பறிபோன உயிர்.!