திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கர்ப்பிணி பெண்ணை கூட விட்டு வைக்காத காம கொடூரன்கள்.!
மத்திய பிரதேச மாநிலத்தில் கர்ப்பிணி பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலம் மெரோனா மாவட்டம் சந்தகாபுரா கிராமத்தை சேர்ந்த 34 வயதான கர்ப்பிணி பெண்ணின் கணவர் பாலியல் பலாத்கார வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இந்த வழக்கில் தனது கணவர் மீது குற்றம் சுமத்திய பெண்ணிடம் சமரசம் பேச கர்ப்பிணி பெண் சென்றுள்ளார்.
அப்போது அந்த வீட்டில் ஒரு பெண் மற்றும் 3 ஆண்கள் உள்ளிட்ட மொத்தம் நான்கு பேர் இருந்துள்ளனர். அப்போது அந்த மூன்று ஆண்களும் சேர்ந்து கர்ப்பிணி பெண் என்று கூட பாராமல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் கர்ப்பிணி பெண்ணை பெற்றோர் ஊற்றி தீ வைத்து எரித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதனிடையே பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் கர்ப்பிணிப் பெண் எரிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து தீயை அணைத்தனர்.
இதனையடுத்து 80 சதவீத தீக்காயங்களுடன் கர்ப்பிணி பெண் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.