திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அந்தரங்க வீடியோவை பரப்புவேன் என மிரட்டிய பூசாரி; ஆணுறுப்பை துண்டித்து கொன்ற முன்னாள் காதலி.. பரபரப்பு சம்பவம்..!
பீகார் மாநிலத்தில் உள்ள கோபால்கஞ்ச் மாவட்டத்தை சார்ந்தவர் மனோஜ் குமார். இவர் அங்குள்ள கோவிலில் பூசாரியாக பணியாற்றி வந்துள்ளார். இவர் பாஜக பிரமுகரின் சகோதரர் ஆவார்.
சில நாட்களுக்கு முன்னதாக கடத்தப்பட்ட இவரை காவல்துறையினர் தீவிரமாக தேடிவந்த நிலையில், கண்கள், பிறப்புறுப்பு ஆகியவை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டவாறு சடலம் மீட்கப்பட்டது.
மேலும் நரபலி ஏதேனும் கொடுக்கப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக கொடூரமாக கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில், காதலியும், பூசாரியும் தனிமையில் இருந்தபோது எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என அவர் மிரட்டியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த நேகா தனது முன்னாள் காதலரை கூட்டாளிகளுடன் சேர்ந்து கொடூரமாக ஆணுறுப்பை வெட்டி கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து நேகா குமாரி உட்பட 3 பேரை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.