"காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது" காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!
#Breaking: இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரதமர்... தமிழர்களின் பாரம்பரிய உடையணிந்து செஸ் ஒலிம்பியாட்-க்கு வருகை.! தமிழகமே பெருமிதம்..!!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி செஸ் போட்டித்தொடருக்கு தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி - சட்டை அணிந்து வந்திருந்தார்.
44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டித்தொடர், இந்தியாவிலேயே முதல் முறையாக இன்று நடைபெறுகிறது. சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டித்தொடர் நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடுகளை தமிழக அரசு திறம்பட செய்துள்ளது. இந்நிகழ்வின் தொடக்க விழா சென்னை நேரு அரங்கத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் போது பரதநாட்டியம் உட்பட இந்தியா திருநாட்டின் 8 வகையான நடனம், லிபியன் நாதஸ்வரத்தின் பியானோ இசைக்கச்சேரி, மணல் சிற்பக்கலைஞர் சர்வம் படேலின் மணல் ஓவியம் போன்றவை வெளிநாட்டு வீரர்களிடையே காட்சிப்படுத்தப்பட்டது.
அகமதாபாத்தில் இருந்து தனி விமானம் மூலமாக சென்னை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் உதவியுடன் அடையார் ஐ.என்.எஸ் கடற்படை தளத்திற்கு சென்றார். அங்கிருந்து சாலை மார்க்கமாக செஸ் போட்டிகள் தொடங்கும் இடத்திற்கு பிரதமர் சென்றார்.
இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டித்தொடருக்கு வருகை தந்த பிரதமர், தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி - சட்டையில் வந்திருந்தார். இதற்கு முன்னதாக சீன அதிபர் ஜி ஜின்பிங் - பிரதமர் மோடி மாமல்லபுரத்தில் சந்திக்கும் சமயத்தில் தமிழர்களின் பாரம்பரிய உடையை அணிந்து வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.