மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொரோனா போர் இன்னும் முடியவில்லை., கவனம்... பிரதமர் மோடி உச்சகட்ட எச்சரிக்கை.!
கொரோனாவுக்கு எதிரான போர் நிறைவடையவில்லை, நாம் கவனத்துடன் இருக்க வேண்டும். தகுதியுடையோருக்கு 2 டோஸ் தடுப்பூசியையும் செலுத்திவிட வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த டிச. 2 ஆம் தேதி இந்தியாவிலும் உருமாறிய கொரோனாவான ஒமிக்ரான் வைரஸ் உறுதி செய்யப்பட்டது. அது அதிதீவிரத்துடன் பரவி வரும் நிலையில், இந்தியா முழுவதும் 300 க்கும் மேற்பட்டோருக்கு ஒமிக்ரான் வகை வைரஸ் உறுதியாகியுள்ளது. இதனால் வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை எடுக்க மத்திய அரசு மாநில அரசுகளை வலிறுத்தியுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி சுகாதார நிபுணர்களுடன் நேற்று இரவு முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மாநில அரசுடன் மத்திய அரசு இணைந்து பணியாற்றவும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஒருங்கிணைந்த செயல்திட்டத்தை கொண்டு வரவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
புதியவகை மாறுபாடு கொண்ட கொரோனாவை எதிர்கொள்ள ஏற்பட்டுள்ள சவால்களை தவிர்க்க, மாவட்ட அளவிலும் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஆக்சிஜன் விநியோகம், மருந்துகள் உள்ளிட்டவை மாநிலத்திற்கு கிடைக்கிறதா? என்பதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தகுதியுள்ளோர்களுக்கு கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸையும் செலுத்த மாநில அரசுகளுக்கு அறிவுறுத்திய நிலையில், புதிய வகை கொரோனாவை கருத்தில் கொண்டு எச்சரிக்கை, விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கொரோனாவுக்கு எதிரான போர் நிறைவடையவில்லை. தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.