கொரோனா இன்னும் முடியலை.. மக்களே உஷார் - பிரதமர் மோடி உச்சகட்ட எச்சரிக்கை.!



prime-minster-narendra-modi-speech

பெருந்தொற்று நோய்க்கு எதிராக போராட வேண்டும். தங்களின் முன்னெச்சரிக்கையை தவிர்த்துவிட கூடாது என பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

குஜராத் மாநிலத்தில் உள்ள கத்திலா நகரில் அமைந்துள்ள உமய்யா மாதா கோவில் தின விழா மற்றும் இராம நவமியினை முன்னிட்டு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, "கொரோனா வைரஸ் நாட்டினை விட்டு முழுவதுமாக வெளியேறவில்லை. கொரோனாவின் நெருக்கடி முற்றிலுமாக முடிந்துவிட்டது என யாரும் கூறவில்லை. 

narendra modi

கொரோனா தனது வடிவத்தினை மாற்றிக்கொண்டு பரவி வருகிறது. பெருந்தொற்று நோய்க்கு எதிராக போராட வேண்டும். தங்களின் முன்னெச்சரிக்கையை தவிர்த்துவிட கூடாது. கொரோனா வைரஸின் பரவலினை கட்டுக்குள் வைக்க 185 கோடி டோஸ் தடுப்பூசி இந்தியாவில் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இது உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது" என்று பேசினார்.