பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரியான கணவர்.! முதல் நாளே நடிகை சுஜா வருணி போட்ட பதிவு.!
ஒன்றா, இரண்டா... 142 பள்ளி மாணவிகளுக்கு 6 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்த அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்: அதிரவைக்கும் சம்பவம்.!
பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் தொல்லை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டிய முக்கிய பொறுப்பில் இருக்கும் ஆசிரியரே, அவர்களுக்கு எதிரான செயலில் 6 ஆண்டுகளாக ஈடுபட்டு வந்த அதிர்ச்சி தகவல் அம்பலமானது.
ஹரியானா மாநிலத்தில் ஜிந்த் பகுதியில் செயல்பட்டு வரும் அரசுப்பள்ளியில் பயின்று வரும் 142 மாணவிகளுக்கு, பள்ளியின் தலைமை ஆசிரியர் கடந்த 6 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய காவல் துறையினர், பள்ளியில் பயின்று வந்த 390 மாணவிகளிடம் விசாரணை நடத்தியதில், 142 மாணவிகள் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. பள்ளியில் பயின்று வந்த 15 மாணவிகள் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசுட், தேசிய பெண்கள் ஆணையம், மாநில பெண்கள் ஆணையத்திற்கு கடந்த அக்.31ம் தேதி புகார் அனுப்பியுள்ளனர்.
இதனையடுத்து, அதிகாரிகளின் உத்தரவின் பேரில் விசாரணை நடைபெற்று, கடந்த செப்.13 அன்று ஹரியானா மாநில பெண்கள் ஆணையம் சார்பில் விசாரணை நடத்தப்பட்டு, ஜிந்த் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பள்ளியின் தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
கடந்த அக்.30ம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, நவம்பர் 04ம் தேதி குற்றவாளியான தலைமை ஆசிரியர் கைது செய்ய்யப்பட்டார். 60 மாணவிகள் தாமாக முன்வந்து தலைமை ஆசிரியருக்கு எதிராக பெண்கள் ஆணையத்தின் விசாரணையின்போது வாக்குமூலம் அளித்தனர்.
அதனைத்தொடர்ந்து நடந்த மறைமுக விசாரணையில், 142 பேர் பாதிக்கப்பட்டு இருந்தது உறுதியானது. தலைமை ஆசிரியரின் மீது போக்ஸோ சட்டம் பாய்ச்சப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியரின் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டு, பள்ளியில் இருந்து வெளியேறிய முன்னாள் மாணவிகளின் புகாரும் பெறப்பட்டுள்ளது.
உரிய விசாரணையை விரைந்து நடத்த மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 6 பேர் கொண்ட சிறப்பு தனிப்படை குழு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 10 நாட்களில் சிறுமிகளுக்கு ஆலோசனை வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.