மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடக்கொடுமையே.. இப்படிகூட செய்வாங்களா.! போலீஸ் சோதனைக்கு பயந்து, சிறையில் கைதி செய்த காரியம்.! ஷாக்கான போலீசார்கள்!!
போலீசார் சோதனை மேற்கொண்ட போது கைதி ஒருவர் செல்போனை கடித்து விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் பகுதியை சேர்ந்த குவாஷிகர் அலி என்பவர் கடந்த 2 வருடத்திற்கு முன்பு போதை மருந்து தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இந்நிலையில் அந்த சிறையில் கைதிகள் பலர் தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்துவதாக காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. அதனால் போலீசார்கள் சிறையில் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் அப்பொழுது சில கைதிகளிடம் செல்போன், போதை பொருட்கள் போன்றவை கைப்பற்றப்பட்டு அவர்களுக்கு தண்டனையும் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் இருதினங்களுக்கு முன்பு மீண்டும் சோதனை நடைபெற்றுள்ளது. அப்பொழுது குவாஷிகர் அலியிடம் செல்போன் இருப்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இந்த நிலையில் அவர் போலீசில் மாட்டாமல் இருப்பதற்காக செல்போனை கடித்து விழுங்கியுள்ளார்.
பின்னர் அவருக்கு மறுநாள் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு அவர் அலறி துடித்துள்ளார். இந்த நிலையில் சிறை காவலர்கள் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வயிற்றில் செல்போன் உதிரி பாகங்கள் இருப்பதை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் அவருக்கு விரைவில் அறுவை சிகிச்சை நடைபெற இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.