பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரியான கணவர்.! முதல் நாளே நடிகை சுஜா வருணி போட்ட பதிவு.!
#Breaking: புதுச்சேரி மாநிலத்திலும் ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம் உறுதி - சட்டப்பேரவையில் அமைச்சர் அதிரடி அறிவிப்பு.!
பல குடும்பங்களின் வாழ்க்கையை சீரழித்து உயிரைக்குடித்த ஆன்லைன் ரம்மிக்கு இறுதிநாள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நெருங்கிவிட்டது.
புதுச்சேரி மாநில சட்டப்பேரவை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இன்று அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் சிவா கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தில், "ஆன்லைன் ரம்மிக்கு எதிராக தமிழகத்தை போல, புதுச்சேரி மாநிலத்திலும் தடை சட்டம் கொண்டு வர வேண்டும்.
சுற்றுலா மற்றும் ஆன்மீக பூமியான புதுச்சேரியிலும் ஆன்லைன் விளையாட்டினால் பல தற்கொலைகள் நடந்துவிட்டன. இதனை மேற்படி நடக்காமல் தடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது" என குறிப்பிட்டார்.
இதனையடுத்து, எதிர்க்கட்சி தலைவருக்கு பதில் அளித்த அம்மாநில சட்டத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆன்லைன் தடை சட்டம் இயற்றப்படும் என உறுதி அளித்துள்ளார். இதனால் புதுச்சேரி மாநிலத்திலும் விரைவில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கப்படும் என்பது உறுதியாகியுள்ளது.
இந்த தீர்மானத்திற்கு காங்கிரஸ், திமுக, பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களும் ஆதரவு அளித்தனர்.