தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
இனி புதுச்சேரி வாசிகள் வெளியில் சென்று வந்தால் அவ்வளவு தான்! முதல்வர் அதிரடி அறிவிப்பு
நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த சமயத்தில் புதுச்சேரியை சேர்ந்தவர்கள் வெளி மாநிலங்களுக்கு சென்று வந்தால் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் இதுவரை 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இன்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கொரோனா பரவலை தடுக்க மாநில எல்லைகள் மூடப்பட்டுள்ளதாகவும் வெளி மாநிலத்தவர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை எனவும் குறிப்பிட்டார்.
மேலும் புதுச்சேரியில் கொரோனா குறைந்துள்ளதற்கு காரணம் கட்டுப்பாடுகள்தான். எனவே அதை மக்கள் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். ஊரடங்கு அமலில் இருக்கும் இந்நேரத்தில் புதுச்சேரியை சேர்ந்தவர்கள் வெளிமாநிலத்துக்கு அனுமதியோடு சென்று வந்தாலும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். இதன் மூலம் பெரும்பாலான மக்கள் வெளியே செல்வதை தடுக்க முடியும் என கூறினார்.