#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இன்பச் சுற்றுலா இறுதிச் சுற்றுலாவான சோகம்.. கடலில் மூழ்கி கல்லூரி மாணவர் பரிதாப பலி.!
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் ஆதித்யா. இவர் திருச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் போன்று வருகிறார். விடுமுறை தினத்தை முன்னிட்டு, இவர் தனது 25 நண்பர்களுடன் கடந்த செப் 7ம் தேதி புதுச்சேரிக்கு சுற்றுலா சென்றுள்ளார் .
அங்கு நண்பர்கள் அனைவரும் உற்சாகமாக பல இடங்களை சுற்றிப்பார்த்த நிலையில், கடற்கரைக்கும் சென்றுள்ளனர். அங்கு கடலில் குளித்துக்கொண்டு இருந்தபோது, ஆதித்யா திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி இழுத்து செல்லப்பட்டார்.
கடலில் மூழ்கி சோகம்
அவரை பதறியபடி நண்பர்கள் மீட்க முயன்றும் பலனில்லை. இதனையடுத்து, காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கடலோர காவல்துறையினர், மீனவர்கள் உதவியுடன் கடலில் மாயமான ஆதித்யாவை தேடும் பணியானது நடைபெற்று வந்தது.
இதையும் படிங்க: கார் - இருசக்கர வாகனம் மோதி பயங்கர விபத்து; ஒருவர் பரிதாப பலி.!
இதனிடையே, கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவர், கடலில் மிதந்த மாணவர் ஆதித்யாவின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தார். அவரிடம் இருந்து உடலை பெற்ற அதிகாரிகள், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் சக மாணவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: காவேரி ஆற்றில் குளிக்கச்சென்ற சிறுவன் சடலமாக வீடுதிரும்பிய சோகம்.. ஆனந்த குளியலில் நடந்த துயரம்.!