மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பாலியல் முயற்சி! இளைஞருக்கு வேற லெவல் வினோத தண்டனை விதித்த நீதிபதி! குவியும் பாராட்டுகள்!!
பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தில் வசித்து வந்தவர் லாலன் குமார் சபி. 20 வயது நிறைந்த அவர் சலவைத் தொழிலாளராக இருந்துள்ளார். இந்நிலையில் அவர், கடந்த ஏப்ரல் மாதம் ஒரு பெண்ணை மானபங்கப் படுத்தி, பாலியல் கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளார். இதனை தொடர்ந்து அவர் மீது அப்பெண் போலீசில் புகார் அளித்தநிலையில் அந்த இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் தனக்கு ஜாமீன் அளிக்கக்கோரி லாலன் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி சில நிபந்தனைகளை விதித்து அவருக்கு ஜாமீன் வழங்கினார். அதாவது இளைஞர் லாலன், அவர் வசிக்கும் கிராமத்தில் உள்ள அனைத்து பெண்களின் உடைகளையும் ஆறு மாதத்திற்கு இலவசமாக சலவை மற்றும் அயர்ன் செய்து கொடுக்க வேண்டும்.
இதனை நன்றாக கவனித்து பஞ்சாயத்து தலைவர் நஜிமா இதுகுறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தண்டனை பெண்களுக்கு எதிரான குறுகிய மனப்பான்மை உடையவர்களுக்கு, பெண்களுக்கு மரியாதையை ஏற்படுத்தும் வகையில் அமையும் என கூறப்படுகிறது.