மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
புதுமண ஜோடிக்காக, திடீரென காரை நிறுத்தி முதல்வர் செய்த காரியம்! தீயாய் பரவும் வீடியோ!!
பஞ்சாப் மாநிலத்தில் ஆய்வுக்காக சென்ற முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி வழியில் புதிதாக திருமணமான ஜோடியை கண்ட நிலையில், காரிலிருந்து இறங்கி அவர்களுக்கு வாழ்த்து கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது
பஞ்சாப் மாநில முதல்வராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சரண்ஜித் சிங் சன்னி பதவி வகித்து வருகிறார். அவர் பதிண்டா என்ற மாவட்டத்திற்கு ஆய்வுக்காக காரில் சென்று கொண்டு இருந்துள்ளார். அப்பொழுது அவர் மண்டிகிராமம் என்ற கிராமத்தின் வழியாக சென்றபோது புதிதாக திருமணமான ஜோடியினர் திருமணக்கோலத்தில் வந்துள்ளனர்.
During his visit to Bathinda today, Chief Minister @CHARANJITCHANNI spotted a newly married couple at village Mandi Kalan and suddenly stopped his vehicle to convey his best wishes. pic.twitter.com/kws6XBAZGf
— Government of Punjab (@PunjabGovtIndia) September 26, 2021
இதனைக் கண்ட சரண்ஜித் சிங் சன்னி காரிலிருந்து இறங்கி அந்தத் திருமண ஜோடிக்கு வாழ்த்து கூறி மணமக்களை ஆசீர்வாதம் செய்துள்ளார். மேலும் மணமக்கள் வீட்டார் தட்டில் வைத்திருந்த இனிப்பினை எடுத்து வாயில் போட்டுக் கொண்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.