35 நாட்கள்.. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சுனிதா உருக்கமாக போட்ட முதல் போஸ்ட்.!
நாளை முதல் பள்ளிகள் காலை 10 மணிக்கு திறக்கப்படும்; பனிப்பொழிவு அதிகரிப்பால் முதல்வர் அறிவிப்பு.!
மார்கழி மாத பனிபொழிவால் பள்ளிகள் திறக்கும் நேரம் மாற்றியமைக்கப்ட்டுள்ளது.
இந்தியாவில் மார்கழி மாதத்தில் கடுமையான பனிப்பொழிவு இருக்கும். இது இந்தியாவில் உள்ள பல மாநிலங்களுக்கு பொருந்தும் என்பதால், அனைத்து இடங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் ஏற்படுத்தப்படும்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே பஞ்சாப் மாநிலத்தில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையானது கடுமையாக பாதிக்கப்பட்டு, காலை நேரங்களில் வாகன விபத்துகளும் அதிகளவில் ஏற்பட்டுள்ளன.
இதனால் அம்மாநில முதல்வர் பகவந்த் மான், மாநிலத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் நாளை (டிச.21) முதல் காலை 10 மணிக்கு திறக்கப்பட்டு வழக்கமாக முடிவடையும் நேரங்களில் மூடப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முதல்வரின் அறிவிப்பு அம்மாநில மக்களால் வரவேற்கப்பட்டுள்ளது.