திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அடடே... என்னா வரவேற்பு.! ... திருடனை வித்தியாசமான முறையில் டீல் செய்த மக்கள்.!
பஞ்சாப் மாநிலத்தில் மோட்டார் சைக்கிளை திருடிய நபருக்கு ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி மாலை அணிவித்து மரியாதை செய்து சம்பவம் அதிர்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் தான் இந்த சம்பவம் நடைபெற்று இருக்கிறது. அந்தப் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் அடிக்கடி திருடு போயிருக்கின்றன. இது தொடர்பாக பொதுமக்கள் புகார் அளித்தும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து பொதுமக்களே திருடனை பிடிப்பதற்காக களத்தில் இறங்கினர். அவர்கள் கிராமம் கிராமமாக ரோந்து சென்று மோட்டார் சைக்கிள் திருடனை தேடி வந்தனர். இந்நிலையில் ஒரு கிராமத்தில் மோட்டார் சைக்கிளை திருடிய இளைஞனை பிடித்த பொதுமக்கள் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இந்த சம்பவம் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அந்த கிராம மக்கள் ஒருவரிடம் கேட்டபோது திருடர்களைப் பிடித்து தர்ம அடி கொடுக்காமல் இவ்வாறு செய்தால் மீண்டும் திருட மாட்டார்கள் என தெரிவித்திருக்கிறார். அந்தத் திருடனுக்கு மாலை அணிவித்து அதனை வீடியோவாக எடுத்தும் சமூக வலைதளங்களில் பரப்பி இருக்கின்றனர். அந்த வீடியோ தற்போது ட்ரெண்டிங் ஆகி வருகிறது.