மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விஷ சாராயம் குடித்து சோகம்; 21 பேர் அடுத்தடுத்து துள்ளத்துடிக்க மரணம்.!
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சங்ரூர் பகுதியில், கடந்த 20ம் தேதி பலரும் சாராயத்தை குடித்தனர். இவர்கள் அனைவரும் அடுத்தடுத்து உடல்நலக்குறைவால் பாதிக்கப்படவே, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டனர்.
இவர்களில் கடந்த 20ம் தேதி 4 பேர், 21ம் தேதி 4 பேர், 22ம் தேதி 8 பேர் என 16 பேர் மொத்தமாக உயிரிழந்தனர். எஞ்சியோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கின்றனர்.
இந்நிலையில், இன்று கூடுதலாக 5 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, விஷ சாராயம் குடித்து பலியானோரின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.
இவ்விவகாரம் தொடர்பாக தற்போது வரை காவல் துறையினர் 6 பேரை கைது செய்தனர். விசாரணை தொடர்ந்து வருகிறது. விஷ சாராயம் குடித்து 21 பேர் அடுத்தடுத்து பலியான காரணத்தால், சங்ரூர் சோகத்தில் மூழ்கியுள்ளது.