மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பஞ்சாப் முதல்வரை மண்ணைக்கவ்வ வைத்தது யார்? பெருமிதத்துடன் அரவிந்த் கெஜ்ரிவால்.!
காங்கிரஸ் கட்சி பஞ்சாப் தேர்தலில் தோல்வி அடைந்துள்ள நிலையில், அம்மாநில முதல்வராக இருக்கும் சரண்ஜித் சிங் சன்னியும் தோல்வியை தழுவினார். அவரை தோற்கடித்தது மொபைல் கடை பணியாளர் என்ற தகவலை டெல்லி முதல்வர் பகிர்ந்துள்ளார்.
5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், உத்திரபிரதேசம் மாநில வரலாற்றில் 37 வருடங்களுக்கு பின்னர் ஒரே கட்சி 2 ஆவது முறை ஆட்சி அமைக்கப்போகிறது. பாஜக உத்திரபிரதேசம் மாநிலத்தில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி அடைந்துள்ளது.
காங்கிரசின் கோட்டையாக கருதப்பட்டு வந்த பஞ்சாப் மாநிலத்தில், அக்கட்சியின் பல முன்னணி வேட்பாளர்களும் படுதோல்வி அடைந்துள்ளனர். அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் கிட்டத்தட்ட 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மீ கட்சி தனிப்பெரும்பான்மையில் வெற்றி அடைந்துள்ள நிலையில், இன்னும் சில நாட்களில் அதன் ஆட்சி அமையவுள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் தற்போதைய முதல்வராக இருக்கும் சரண்ஜித் சின் சன்னியும் தோல்வியை தழுவினார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மீ கட்சி வேட்பாளர் லப் சிங் உகோகே வெற்றி அடைந்த நிலையில், அவர் மொபைல் ரிப்பேர் கடையில் பணியாற்றுபவர் என்ற தகவல் தெரியவந்துள்ளது. இந்த தகவலை பெருமிதத்துடன் தெரிவித்த டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சம்கவுர் சாஹிப் தொகுதியில் காங்கிரஸ் பஞ்சாப் முதல்வரை தோற்கடித்தது குறித்து தெரிவித்துள்ளார்.
சரண்ஜித் சிங் சன்னி முதல்வர் வேட்பாளராக 2 தொகுதிகளில் போட்டியிலிட்டு இரண்டிலும் தோல்வியை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.