மக்கள் கொத்து கொத்தாக மடிந்துகொண்டிருக்கும் நிலையில், மத்திய அரசு இதை செய்யலாமா.!! கொந்தளித்த ராகுல்காந்தி.!



rahul gandhi talk about central govt

கடந்த ஆண்டு நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனா தொற்று கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் தீவிரமாக பரவ துவங்கியுள்ளது. கொரோனா தொற்று பரவலால் பல்வேறு மாநிலங்களும் தவித்து வருகின்றன. கொரோனா தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆக்சிஜன் வழங்குவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்றாளர்களுக்கு தற்போது ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு உச்சபட்ச அளவில் ஆக்சிஜன் சிலிண்டரை ஏற்றுமதி செய்து வந்தது தெரியவந்தது. பல மாநிலங்களில் மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டருக்கு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், அதிக அழிவிலான ஆக்சிஜனை இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்துவதில் இந்தியாவிடம் தற்போதுவரை எந்த திட்டமும் இல்லை என்று மத்திய அரசு மீது ராகுல்காந்தி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் தற்போதுவரை இந்தியாவிடம் எந்தவித செயல் திட்டமும் இல்லை. நமது மக்கள் உயிரிழக்கும்போது ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது குற்றச்செயலை தவிர வேறொன்றுமில்லை என தெரிவித்துள்ளார்.