மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தொங்கு பாலம் விபத்து எதிரொலி: பழமையான பாலங்களை பராமரிப்பு பணி செய்ய ரயில்வே துறை முடிவு..!
சமீபத்தில் குஜராத்தில் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள 100 ஆண்டுகள் பழமையான தொங்கு பாலம் ஒன்று புதுப்பிக்கப்பட்டு, மறுபயன்பாட்டுக்கு வந்தது, அந்த பாலம் திடீரென இடிந்து விழுந்தது. நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விபத்தில் 130-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். மச்சு ஆற்றின் அழகை சுற்றுலாவாசிகள் இந்த பாலத்திற்கு சென்று கண்டுகளிப்பது வழக்கம்.
இந்த பாலம் ஆங்கிலேய ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. சரியாக மறுசீரமைப்பு செய்யப்படவில்லை என்றும், மேலும் துருப்பிடித்த, பழைய கேபிள் வயர்கள், அதிக எடை போன்றவை விபத்துக்கான காரணிகளாக கருதப்படுகின்றன. எனவே, வருங்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க 100 வருடங்கள் கடந்த பழமையான பாலங்களை ஆய்வு செய்ய வேண்டியது அவசியம்.
இதேபோன்று, ரெயில்வே துறையிலும், 100 வருடங்கள் பழமையான பாலங்கள் நிறைய உள்ளன. அவற்றின் நம்பகதன்மையை ஆய்வு செய்து பராமரிக்க வேண்டும். 100 ஆண்டுகள் கடந்த 38,850 ரெயில்வே பாலங்கள் நாட்டில் இருக்கின்றது என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் முன்பு கூறியிருந்தது. இந்த பாலங்களை தொடர்ந்து கண்காணித்து, பராமரிக்கும் பணியை ரெயில்வே நிர்வாகம் செய்து வருகிறது. மேலும் இந்த பாலங்களை ரயில்வே நிர்வாகம் வருடத்திற்கு இரு முறை ஆய்வு செய்து வருகிறது.