மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உங்களின் செல்ல மகன் பிரீ பயர் கேம் விளையாடுகிறாரா?; கொஞ்சம் கவனிங்க.. நாளை இதே நிலைமை அவருக்கும் வரலாம்.!
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அல்வார் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன், எப்போதும் பிரீ பயர் கேம் விளையாடி வந்துள்ளார். பெற்றோர் பலமுறை கண்டித்தும் கேட்டபாடில்லை.
நாளொன்றுக்கு சிறுவன் 15 மணிநேரம் செல்போனில் கேம் விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிறுவனின் செயல்பாடுகள் அவனின் மனநிலையை கடுமையாக பாதித்துள்ளது.
இதனால் எப்போதும் சிறுவன் பயர், பயர் என கத்திக்கொண்டும், துப்பாக்கிகளால் சுடுவது போன்றும் கைகளில் செய்கை செய்ய தொடங்கியுள்ளார். மேலும், சிறுவனின் கைகளும் நடுங்கிக்கொண்டு இருக்கின்றன. இது சிறுவனின் பெற்றோரிடையே கவலையை ஏற்படுத்திஉள்ளது.