#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நாடே அதிர்ச்சி..! 8 பேர் கும்பலால் 17 வயது சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம்.. வீடியோ எடுத்து மிரட்டிய பயங்கரம்.. பதறவைக்கும் துயரம்.!!
17 வயது சிறுமியை 8 பேர் கும்பல் கூட்டாக சேர்ந்து சீரழித்து, வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்ட பயங்கரம் நெஞ்சை உலுக்க வைத்துள்ளது.
இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அல்வார் மாவட்டத்தில், கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதியில் கோதாரா பகுதியில் வசித்து வரும் சாகில் என்பவன் 17 வயது சிறுமிக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளான். அவன் சிறுமியிடம், உனது ஆபாச படங்கள் என்னிடம் இருப்பதால், நீ நான் அழைக்கும் இடத்திற்கு வர வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதனால் பயந்துபோன சிறுமி கயவன் கூறிய இடத்திற்கு செல்ல, அங்கு முன்னதாகவே தயாராக இருந்த அக்கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் அர்பாஸ், ஜாவித், முஸ்தாகீம் ,தஃலீம், சல்மான், அக்ரம், சாகில் உட்பட 8 பேர் சேர்ந்து சிறுமியை கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இதனை வீடியோவாகவும் எடுத்து வைத்த காம கொடூரர்கள், பலாத்கார விடியோவை இணையத்தில் பதிவு செய்யாமல் இருக்க ரூ.50 ஆயிரம் பணம் வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனால் பயந்துபோன சிறுமி என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி இருந்து வந்துள்ளார். மேலும், தன்னால் இயன்ற தொகையை வழங்கி வந்துள்ளார்.
சிறுமியால் ஒரு சமயத்திற்கு மேல் பணம் கொடுக்க இயலாமல் சென்றுவிட, காம கூட்டம் விடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளது. இதனால் விஷயம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவரவே, அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்ற காவல் துறையினர் சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது, சிறுமி கயவர்களால் கூட்டாக சேர்ந்து சீரழிக்கப்பட்ட துயரம் அம்பலமானது. மேலும், டிசம்பர் 31, ஜனவரி 3, ஏப்ரல் 6 ஆகிய தேதிகளில் சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரத்தை அனுபவித்த துயரம் உறுதியானது. போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்துள்ள காவல் துறையினர் அக்ரமை கைது செய்தனர். பிறரை தேடி வருகின்றனர்.