#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அத்தையுடன் கள்ளக்காதல்.. மாமாவை போட்டுத்தள்ளிய பயங்கரம்.. கள்ளகாதலால் நடந்த விபரீதம்.!
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஆழ்வார் மாவட்டம், கிதூர் கிராமத்தை சேர்ந்தவர் சுபே சிங் (வயது 35). இவரின் மனைவி மீனா. தம்பதிகளுக்கு குழந்தைகள் இருக்கின்றனர்.
பிரேம் நகரை சேர்ந்தவர் அரவிந்த். இவர் மீனாவின் மருமகன் முறை கொண்ட உறவினர் ஆவார். மீனா - அரவிந்த் இடையே ஏற்பட்ட பழக்கமானது பின்னாளில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இதனையடுத்து, கள்ளக்காதல் ஜோடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்த நிலையில், இவ்விவகாரம் சுபே சிங்குக்கு தெரியவந்துள்ளது. அவர் கள்ளக்காதல் ஜோடியை கண்டித்து இருக்கிறார்.
இதனை ஏற்றுக்கொள்ளாத கள்ளக்காதல் ஜோடி, சுபே சிங்கை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்து இருக்கிறது. பின் ஊரார் மற்றும் காவல் துறையினரை நம்பவைக்க குளியலறையில் அவர் மயக்கமடைந்து இருப்பதாக நாடகம் அரங்கேற்றப்பட்டது.
தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், சுபேவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முடிவில் அவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து, அதிகாரிகள் நடத்திய விசாரணையில் கள்ளக்காதல் காரணமாக கொலை நடந்தது தெரியவரவே, மீனா - அரவிந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.