மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடுவழியில் டீசல் இல்லாமல் நின்றுபோன தனியார் ஆம்புலன்ஸ்.. பெண் நோயாளி பரிதாப பலி.!
இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பன்ஸ்வாரா மாவட்டம், தனப்பூர் பகுதியில் வசித்து வருபவர் தேஜியா (வயது 40). இவர் வீட்டில் இருக்கையில் நேற்று திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
இதனையடுத்து, உறவினர்கள் 108 அவசர ஊர்தியின் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முற்பட்டுள்ளனர். தனியார் அவசர ஊர்தி விரைந்து வந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளது.
அப்போது, அவசர ஊர்தியில் டீசல் தீர்ந்துபோனதால் நடுவழியில் நின்றுள்ளது. தேஜியாவின் உறவினர்கள் விசாரித்தபோது வாகனத்தில் டீசல் இல்லாததால் நின்றுபோனது அம்பலமானது.
என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கிய உறவினர்கள் அவசர ஊர்தியை தள்ளிக்கொண்டு மருத்துவமனைக்கு செல்ல முயற்சித்துள்ளனர். ஆனால், நடுவழியிலேயே தேஜியாவின் உயிர் பறிபோயுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.