கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
6 நாட்களாக இளம்பெண் கூட்டுப்பாலியல் பலாத்காரம், கொலை.. இந்தியாவை அதிரவைத்த பரபரப்பு சம்பவம்.!
6 நாட்களாக பெண்மணி கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பதைபதைப்பு சம்பவம் நடந்துள்ளது.
இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் நாகப்பூர் மாவட்டம், தீட்வானா பகுதியில் 35 வயதுடைய பெண்மணி வசித்து வருகிறார். இந்த பெண்மணி கடந்த பிப். 4 ஆம் தேதி மாயமான நிலையில், அவரை தேடி குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் அலைந்துள்ளனர். ஆனால், அவர் இறுதி வரை காணாததால் பிப். 6 ஆம் தேதியில் குடும்பத்தினர் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், குடும்பத்தினரின் புகாரில் சுரேஷ் மெகாவால் என்பவரின் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, சுரேஷ் மெகாவாலை பிப். 9 ஆம் தேதி கைது செய்த காவல் துறையினர், அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது பெண் 2 பேரால் கடத்தி கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது.
பாலியல் பலாத்கார கொடுமையை நிகழ்த்தி முடித்ததும், பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சித்துள்ளனர். மூச்சுத்திணறல் ஏற்பட்டு பெண்மணி மயங்கிவிடவே, அவர் இறந்துவிட்டதாக எண்ணி இருவரும் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். ஆனால், அவர்கள் கூறிய இடத்தில் பெண் இல்லை. இதனால் அவர் மயக்கத்தில் இருந்து எழுந்து தப்பித்து இருக்கலாம் அல்லது வேறு ஒருவரால் கடத்தப்பட்டு இருக்கலாம் என காவல் துறையினர் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
அதனைத்தொடர்ந்து, பெண்மணியை பல இடங்களில் அதிகாரிகள் தேடியும் கிடைக்காத நிலையில், பிப். 12 ஆம் தேதி பெண் மயங்கிய நிலையில் ஊரில் இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள வறண்ட ஏரியில் மீட்கப்பட்டார். அவரை மீட்ட அதிகாரிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்த நிலையில், மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி பெண் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விஷயம் தொடர்பான விசாரணையில், பெண் 6 நாட்களாக கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியாகிய நிலையில், அவரை பலாத்காரம் செய்த கொடூரர்களுக்கு அதிகாரிகள் வலைவீசியுள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக சுரேஷ் மெகாவால் மட்டும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 18 வயது கீழுள்ள சிறுவன் விசாரணை வளையத்தில் இருக்கிறான். சம்பவம் தொடர்பாக தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பெண் மாயமானது தொடர்பாக புகார் அளித்தும் மந்தமான விசாரணை நடத்தியதாக தீட்வானா காவல் ஆய்வாளர் நரேந்திர ஜாகர் மற்றும் தலைமை காவலர் பிரகலாத் சிங் ஆகியோர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.