#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஒன்றரை வயது குழந்தை கண்முன் தாய் இருவர் கும்பலால் கூட்டுப்பாலியல் பலாத்காரம்; கத்தி முனையில் வீடுபுகுந்து பயங்கரம்.!
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள துங்கர்பூர் பகுதியை சேர்ந்த நபருக்கு திருமணமாகி மனைவி, ஒன்றரை வயதுடைய மகள் ஆகியோர் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், சம்பவத்தன்று இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் கும்பல், பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளது. அங்கு கத்தி முனையில் பெண்ணை இருவர் கும்பலும் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்துள்ளது.
இந்த துயரம் பெண்ணின் ஒன்றரை வயதுடைய மகள் கண்முன் நடந்துள்ளது. கணவர் வீட்டிற்கு வந்ததும் பெண்மணி தனக்கு நடந்த துயரத்தை கூறி கதறியழுத்துள்ளார்.
இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளுக்கு வலைவீசப்பட்டுள்ளது.