திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பேருந்து சக்கரத்தில் சிக்கி கர்ப்பிணி பெண்மணி பரிதாப பலி.!
கர்ப்பிணி பெண்களை அழைத்து செல்வோர், பொறுப்புடன் மிகக்கவனமாக செல்ல வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது இந்த செய்தித்தொகுப்பு.
இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா பகுதியை சேர்ந்த கர்ப்பிணி பெண் கோனா. இவர் சம்பவத்தன்று தனது கணவர் மற்றும் குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்தார்.
அச்சமயம், சாலை சந்திப்பு பகுதியில் இருசக்கர வாகனம் நிலைதடுமாறி விழுந்துள்ளது. இவர்களுக்கு பின்னாலேயே பேருந்து ஒன்றும் வந்துள்ளது.
பேருந்து இவர்களை நெருங்கியபோது இருசக்கர வாகனம் விழுந்ததால், பேருந்து கர்ப்பிணி பெண்ணின் மீது ஏறி இறங்கியது. இந்த சம்பவத்தில் பெண்மணி பரிதாபமாக உடல் நசுங்கி பலியாகினர்.