ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல் 2023: இருதரப்பு மோதல், கல்வீச்சு சம்பவம்.. காவல்துறை குவிப்பு.!



Rajasthan Sikar Fatehpur Stone Pelting Assembly Poll 2023 

 

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 199 தொகுதிகளில், இன்று சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 199 தொகுதிகளில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். 

ஆளும் காங்கிரஸ் - பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தேர்தல் காரணமாக அம்மாநிலத்தில் 1.70 இலட்சம் காவலர்கள் மற்றும் துணை இராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 50 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், அங்குள்ள சிகார் ஷெகாவதி, பதேபூர் போசிவால் பவன் பகுதியில் கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு கூடுதல் காவல் துறையினர் களமிறக்கப்பட்டு, பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

இதுதொடர்பாக பதேபூர் டிஎஸ்பி ராம்பிரசாத் தெரிவிக்கையில், "வாய்த்தகராறு காரணமாக இருதரப்பு கற்கள் வீசி தாக்கிக்கொண்டுள்ளது. இந்த சம்பவம் வாக்குச்சாவடி மையத்திற்கு அருகே நடக்கவில்லை. 

வாக்குச்சாவடி மையத்தில் தொடர்ந்து வாக்குப்பதிவு நடந்து வருகிறது. மோதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். எஞ்சியோரை விரைவில் கைது செய்வோம். வாக்குப்பதிவு தொடர்ந்து நடந்து வருகிறது" என கூறினார்.